Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகள் விவாகாரத்தை சர்ச்சையாக்குவதை நிறுத்துவீர் – ஒற்றுமைத்துறை அமைச்சர் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 11 – தாய்மொழிப் பள்ளிகளான தமிழ் மற்றும் சீன மொழிப்பள்ளிகள் விவகாரத்தை சர்ச்சையாக்குதை நிறுத்திக்கொள்ளும்படி, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஏரோன் அகோ டகாங் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மற்றும் சீன மொழிப் பள்ளிகள் விவகாரத்தை சர்ச்சையாக்குவது பதட்டம் அல்லது நெருக்கடியை அதிகாரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். நீண்ட வரலாற்றைக் கொண்ட தாய்மொழிப் பள்ளிகள் மலேசியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஏரோன் தெரிவித்தார். பிளவுகளை ஏற்படுத்தும் அம்சங்களை தாய்மொழிப் பள்ளிகள் கொண்டிருக்கவில்லை.

ஒற்றுமைக்கான முக்கிய கூறுகளாக தாய்மொழிப்பள்ளிகள் தான் திகழ்கின்றன. சீனப் பள்ளிகளில் சீனர் அல்லாத மாணவர்களும், தமிழ்ப்பள்ளிகளில் இந்தியர் அல்லது மாணவர்களும் 2018ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டுவரை தொடர்ந்து அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. அனைத்து தரப்பினரும் உண்மையாக இருந்தால் எங்கிருந்தாலும் ஒற்றுமை மலரமுடியும் என்பதை இது காட்டுவதாக ஏரோன் கூறினார்.

தாய்மொழிப் பள்ளிகள் குறித்து ஒற்றுமைத்துறை அமைச்சு ஒரு ஆய்வை நடத்தியதாகவும் உண்மையில் அனைத்து பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒருவரையொருவர் ஒன்றிணைப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் ஒரு தளமாக இருப்பதை அந்த ஆய்வின் முடிவு காட்டியிருப்பதாக அவர் கூறினார். 1966 ஆம் ஆண்டின் கல்விச் சட்டத்தின் 28 ஆவது விதியின் கீழ் தேசிய மற்றும் தேதிய மாதிரி பள்ளிகளை தோற்றுவித்த தாய்மொழி கல்வியை கல்வி அமைச்சு தொடர்ந்து நிலைநிறுத்தும் என கல்வி அமைச்சு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!