Latestமலேசியா

திருமணமான 12 நாட்களுக்கு பிறகே ‘மனைவி’ உண்மையில் ஓர் ஆண் என்பதை அறிந்த மணமகன் அதிர்ச்சி ; இந்தோனேசியாவில், ஆள்மாறட்டம் செய்த ஆடவன் கைது

கோலாலம்பூர், மே 30 – இந்தோனேசியாவில், திருமணம் ஆன 12 நாட்களுக்கு பிறகே, தான் திருமணம் செய்துக் கொண்ட “மனைவி” உண்மையில் ஓர் ஆண் என்பதை மணமகன் கண்டுபிடித்ததை அடுத்து, அவர்களின் காதல் திருமணம் “பயங்கரமான” முடிவை எட்டியது.

ஜாவாவிலுள்ள, நரிங்குல் நகரை சேர்ந்த 26 வயது AK எனும் மணமகன், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 26 வயது அடிண்டா கன்சாவை கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளார்.

“ஆன்லைனில்” அறிமுகமான அவர்கள் பின்னர் நேரிலும் சந்தித்து கொண்டனர்.

ஆனால், சந்திக்கும் போதெல்லாம், அடிண்டா “நிகாப்” எனப்படும் முகத்தை மறைக்கும் கவசம் அணிந்திருந்ததால், அவர் சமயம் சார்ந்தவர் என AK எண்ணியுள்ளார்.

அதன் பின்னர், எளிமையான நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர்.

தமக்கு பெற்றோர் இல்லை என கூறி, திருமணத்திற்கு அடிண்டா யாரையும் அழைக்கவில்லை என்பதோடு, திருமணத்திற்கு பின்னர் வீட்டில் கூட அவர் நிகாப் அணிந்திருந்ததாலும், சந்தேகம் எழுந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விசாரித்து அடிண்டாவின் பெற்றோரை கண்டு பிடித்த AK-விற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அடிண்டா உண்மையில் தங்கள் “மகன்” என அவர்கள் கூறியது தான் அதற்கு காரணம் ஆகும்.

AK-வின் பரம்பரை சொத்துகளை சொந்தமாக்கிக் கொள்ள, பெண்ணை போல ஆள்மாறாட்டம் செய்து அடிண்டா அவரை திருமணம் செய்துக் கொண்டதும் தெரிய வந்தது.

அதனால், தன்னை அடிண்டா என அடையாளப்படுத்திக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்த ஆடவனை கைதுச் செய்த போலீசார் அவனை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!