Latestமலேசியா

திரெங்கானு தீ விபத்தில் தந்தையும் 9 வயது மகனும் பலி

திரெங்கானு, ஆகஸ்ட் 25 – திரெங்கானு குவாலா நெரூஸ், கம்போங் தோக் ஜெம்பாலில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீட்டுத் தீ விபத்தில் 40 வயதுடைய தந்தையும், அவரது 9 வயது மகனும் உயிரிழந்தனர்.

அதிகாலை ஏற்பட்ட தீயில் இரண்டு மாடி வீடு சுமார் 70 விழுக்காடு சேதமடைந்தது. வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணும் தீயிலிருந்து தப்பி வெளியேறியதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அதிகாலை 2.58 மணியளவில் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வீட்டின் உட்புறப் படிக்கட்டு தீயில் சேதமடைந்ததால், மேல்மாடியில் சிக்கியிருந்த இருவரையும் இரும்புக் கட்டமைப்பு மற்றும் ஏணி உதவியுடன் மீட்டனர்.

தீ காலை 6.10 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணமும் ஏற்பட்ட இழப்பின் மதிப்பும் தீயணைப்புத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!