
வாஷிங்டன், ஜூலை-21 – தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கடற்படை வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Second Thomas Shoal பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ‘ஆபத்தானது மற்றும் ஆக்ரோஷமானது’ என்று வாஷிங்டன் சாடியது.
பிலிப்பைன்ஸின் BRP Sierra Madre போர்க்கப்பலுக்கு அருகில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, சீனக் கடற்படை வீரர்கள் பிலிப்பின்ஸ் மாலுமியைத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலில் பிலிப்பின்ஸ் வீரர் ஒருவர் காயமடைந்ததுடன், அவர்களது படகும் சேதமடைந்துள்ளது.
வட்டார அமைதியைக் குலைக்கும் வகையில் சீனா தொடர்ந்து இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மறுபுறம், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ மணிலா நகருக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் அதிகரித்து வரும் இந்த மோதல்கள், வட்டார பாதுகாப்பை உறுதிச் செய்வதில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.



