Latestமலேசியா

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கி சுழற்கிண்ணப் போட்டி; சிலாங்கூர் அணிக்கு இரட்டை வெற்றி

புக்கிட் ஜாலில், பிப் 16 – தேசிய அளவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஹாக்கிப் போட்டி நேற்று இரண்டாவது ஆண்டாக புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்றது.

ஆண், பெண் என இரு பாலர்களுக்கான இந்த போட்டியில் 55 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 350க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர் என ஏற்பாட்டுக் குழு தலைவர் ஆசிரியர் டோமினிங் தெரிவித்தார்.

இந்த சுழற்கிண்ணப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவிலும் பெண்களுக்கான பிரிவிலும் சிலாங்கூர் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற ஆண் அணியினருக்கு RM 2OOO ரிங்கிட்டும், பெண் அணியினருக்கு RM 1000 ரிங்கிட்டும் வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதற்கிடையில் அடுத்தடுத்த நிலையில் வெற்றிபெற்ற குழுவினருக்கும் பரிசு தொகையுடன் சான்றிதழும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால், கியூஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணா சேனாதிராஜா, மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் பாண்டியன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் மணிசேகரன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆசிரியர் டோமினிங் உட்பட பல பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இப்போட்டி மிக சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்ததாகவும் அடுத்த ஆண்டும் இந்த ஹாக்கி போட்டி நடைபெறும் எனவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால் கூறினார்.

இதனிடையே, தேசிய ஹாக்கி அணியின் விளையாட்டாளர்கள் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்றுடன் முடிவுறும் தேர்வு நடைமுறை இன அடிப்படையில் இல்லை என்றும் திறமையான விளையாட்டாளர்கள் எந்த இனமாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்; அதுதான் மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் இலக்கு என்றும் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!