Latestமலேசியா

தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டார் – அன்வார் தகவல்

கோலாலம்பூர், மே 27 – தேர்தல் ஆணையத்திற்கான புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். எனினும் அந்த புதிய தலைவர் யார் என்பதை அவர் அடையாளம் கூறவில்லை . தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த Abdul Ghani 66 வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றதால் அந்த பதவி இன்னும் காலியாக இருந்து வருகிறது. அடையாளம் காணப்பட்ட புதிய தலைவருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் இன்னும் அனுமதி அளிக்கவில்லையென அவர் கூறினார். இன்று கலை கண்காட்சியை தொடக்கி வைத்த அன்வாரிடம் அப்துல் கனிக்கு பதில் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் யார் நியமிக்கப்படுவார் என கேட்கப்பட்டபோது இந்த விவரங்களை வெளியிட்டார்.

மேலவையின் தலைவர் Mutang Tagal காலமானதை தொடர்ந்து அவருக்கு பதிலாக யார் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என வினவப்பட்டபோது சரவா அரசியல் தலைவர்களை தாம் நாளை சந்திக்கவிருப்பதாக அன்வார் மறுமொழி தெரிவித்தார் இதனிடையே இலக்கிடப்பட்ட டீசல் உதவி உதவி தொகை தொடர்பான விவகாரம் குறித்து இரண்டாவது நிதியமைச்சர் Amir Hamzah விரைவில் இது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!