Latestமலேசியா

தே.மு நிர்வாகத்தை பின்பற்றி இந்திய மாணவர்களுக்கு 2,200 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்குவீர் – டாக்டர் N.S ராஜேந்திரன் அறைவகூல்

கோலாலம்பூர், மார்ச் 26 – இதற்கு முன் தேசிய முன்னணி நிர்வாகத்தை பின்பற்றி இந்திய மாணவர்களுக்கு குறைந்தது 2,200 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்கும்படி செடிக் எனப்படும் இந்திய சமூகத்திற்கான சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் முன்னாள் தலைமை இயக்குனர் டாக்டர் N.S Rajendran அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். எந்தவொரு சிரமமின்றி இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என முன்னாள் அரசு பணியாளருமான N.S Rajendra வலியுறுத்தினார். இந்திய சமூகத்திற்கு குறிப்பாக B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மெட்ரிகுலேசன் கல்வித் திட்டத்தில் 2,200இடங்களை வழங்கியதை தற்போதைய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென ராஜேந்திரன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு எங்களுக்கு மெட்ரிகுலேசனில் 2,200 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனவே இது ஒன்றும் புதிது அல்ல என N.S Rajendran சுட்டிக்காட்டினார். ஏழை மாணவர்கள் மெட்ரிகுலேசன் கல்வித் திட்டத்தில் இணைந்து உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் தங்களது உயர்க்கல்வியை தொடர முடியும். இதன்வழி பட்டம் பெற்று திரும்பும்போது அவர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெறுவதன் மூலம் சமூகத்திற்கு மாற்றத்தை கொண்டுவர முடியும் என அவர் தெரிவித்தார். பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு நிர்வாகத்திற்கு வந்ததைத் தொடர்நது Sedic மித்ரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நடப்பிலுள்ள 1,500 இடங்களுடன் மேலும் கூடுதலாக 700 மெட்ரிகுலேசன் இடங்களை ஒதுக்குவதாக அப்போதைய பிரதமர் Najib Razak அறிவித்தார். இந்திய சமூகத்திற்கு மெட்ரிகுலேசனில் 2,500 இடங்களை ஒதுக்கி அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தமது கடப்பாட்டை வெளிப்படுத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடந்தவாரம் செனட்டர் சிவராஜ் சந்திரனும் கோரிக்கை விடுத்திருந்தார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!