Latestமலேசியா

தொடரும் புறக்கணிப்பு 100க்கும் மேற்பட்ட KFC விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்

கோலாலம்பூர், ஏப் 29 – சுமார் ஆறு மாதங்களாக  மேற்கொள்ளப்பட்டுவரும்    புறக்கணிப்புகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட KFC விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சீன நாளிதழ் Nanyang Siang Pau தெரிவித்துள்ளது. Google Maps  தரவை மையமாகக்  கொண்டு  அந்த தகவல் வெளியிடப்பட்டது.  ஏப்ரல் 27 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 108 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அது கூறியது. QSR Brands (M) Holdings Bhd ஐ அணுகி கருத்தை வினவியபோதிலும் அது எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லையென  கூறப்படுகிறது. 

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  இஸ்ரேல்பாலஸ்தீன மோதல் தொடங்கியதில் இருந்து Starbucks, McDonalds மற்றும் KFC விற்பனை நிலையங்களின் நாடு தழுவிய நிலையில் புறக்கணிப்பு நடந்து வருகிறது. KFC 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது, நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட கிளைகளை அது  கொண்டுள்ளது. மலேசியாவில் KFC உரிமையை மேற்பார்வையிடும் நிறுவனமான QSR, Singapore, Brunei, மற்றும் Cambodiaவில் உள்ள உணவகங்களையும், மலேசியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் 480 Pizza Hut விற்பனை நிலையங்களையும் நிர்வகிக்கிறது.

ஜோகூர் மாநிலத்தின் முதலீட்டுப் பிரிவான Johor Corporationனில்  (JCorp), QSR இல் மிகப்பெரிய பங்குகளை வைத்திருக்கிறது, இது அதன் துணை நிறுவனமான KFC Holdings (M) Bhd உடன் இணைந்து பிப்ரவரி 2013 இல் தனியார்மயமாக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!