Latestமலேசியா

தொழிலாளர்களை சொக்சோவில் பதியும் சலுகைக் காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஷா ஆலாம், மே-31, தொழிலாளர்களுக்கு சொக்சோ பாதுகாப்பைப் பதியாத மற்றும் சந்தா பங்களிப்பைச் செலுத்தாத முதலாளிமார்களுக்கு, அவ்வாறு செய்திட வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்த வழங்கப்பட்ட Bulan Pemutihan சலுகைக் காலத்தில் முதலாளிகளிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதால் மேலும் 30 நாட்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் Stevan Sim கூறினார்.

அச்சலுகைக் காலத்திற்குப் பிறகும் சொக்சோவில் தங்களது தொழிலாளர்களைப் பதியாத முதலாளிகள் மீது, அபராதம், சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை பாயலாம் என அவர் எச்சரித்தார்.

மே 15 முதல் 29 வரையில் புதிய முதலாளிகளின் பதிவு, முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட 32% அதிகரித்துள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

சொக்சோவில் மேலும் அதிகமான முதலாளிகள் தங்களது தொழிலாளர்கனைப் பதிவுச் செய்து சந்தா பங்களிப்பு செலுத்துவதை ஊக்குவிக்க அந்த சமூக பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம், முதலாளிகளுக்கு மின் அஞ்சல் அனுப்புவதும் அவற்றில் அடங்கும்.

தொழிலாளர்களின் நலன் காக்கப்பட ஏதுவாக, அமைச்சு அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்றும் அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!