
கோலாலம்பூர், செப்டம்பர் 21 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக்காவல் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து போலீசாரும் சிறைத்துறை அதிகாரிகளும் இன்று அவரது ஜாலான் லங்காக் டூட்டா இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் அனுவார் பக்ரி அப்துல் சலாம் (Asisten Komisioner Anuar Bakri Abdul Salam) மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பிற்பகல் நஜீப்பின் இல்லத்திற்கு சென்றனர். வீட்டுக்காவலில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை. இந்தத் தொகையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் டுசுகி மொக்தார் (Tan Sri Mohd Dusuki Mokhtar) தெரிவித்திருந்தார்.
நிபந்தனையுடனான மன்னிப்பு முடிவின்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டால், நஜீப் 2028 ஆகஸ்ட் 23 வரை மீதமுள்ள தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



