Latestஉலகம்

நாய்களை வளர்க்க கூடாது; ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த வட கொரிய

வட கொரிய, மார்ச் 15 – வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்க ஆணையிட்டுள்ளது.

ஆனால், இறைச்சிக்கும் ரோமத்திற்கும் நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நாயை குடும்பத்தில் ஒருவராக நடத்துபவர்கள், அதனுடன் குடும்பாக உண்பது மற்றும் உறங்குவது ஆகியவை ‘social’ வாழ்க்கை முறைக்கு ஒத்துவராது. எனவே இது தவிர்க்கப்பட வேண்டும் ‘ என கண்டித்துள்ளனர்.

அதேபோல் நாய்களுக்கு ஆடைகளை அணிவிப்பதும், மனிதர்களைப் போல் அலங்காரம் செய்வதும், போர்வை போர்த்தி இறந்தவுடன் புதைக்கும் பழக்கம் ஆகியவை கண்டனத்திற்கு உட்படுத்தப்படும் செயலாகுமாம்.

ஆகையால், கொரியாவின் ‘socialist’ பெண்கள் ஒன்றியம் இந்த வினோதமான தடையை அறிவித்துள்ளது.

இந்நிலையில், வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு தேசங்களிலும் நாய் இறைச்சி உண்ணப்படுகிறது.

ஆனால்,தென் கொரியாவில் அது சர்ச்சையாக மாறியதால், அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்டத்தை சியோல் அரசாங்கம் ஜனவரி மாதம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!