Latestமலேசியா

நீலாயில் நீர் பெருக்கின் போது நடு ஆற்றில் சிக்கிக் கொண்ட சிறுவன் உள்ளிட்ட அறுவர் பாதுகாப்பாக மீட்பு

நீலாய், மே-13, நெகிரி செம்பிலான் நீலாயில் ஆற்றில் ஏற்பட்ட நீர் பெருக்கில் சிக்கிக் கொண்டு, பதின்ம வயதினர் ஐவரும் 10 வயது சிறுவனும் பரிதவித்த சம்பவம் பார்ப்போரை பதற வைத்தது.

அச்சம்பவம் Kampung Tebing Tinggi, Batang 9, Sungai Batang Labu ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது அவர்கள் அறுவரும் ஆற்றின் நடுவே இருந்த பெரியப் பாறைக் கல்லில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பெய்த கன மழையால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதில் அவர்கள் பாறையின் மீதே சிக்கிக் கொண்டனர்.

நடு ஆற்றில் அச்சத்தில் உறைந்துப் போய், ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு அவர்கள் நின்றிருந்த காட்சி நெஞ்சைப் பதற வைத்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, பாதுகாப்பு ஜேக்கட்டுகளைப் பயன்படுத்தி high line முறையில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டு  வந்தது.

6.40 மணிக்கெல்லாம் மீட்புப் பணிகள் முழுமைப் பெற்று அந்த அறுவரும் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!