Latestமலேசியா

நெடுஞ்சாலையில், மின்சார ஸ்கூட்டரை அடாவடியாக ஒட்டி வேக வரம்பை சோதனை செய்யும் நபர் ; இணையவாசிகள் சினம்

கோலாலம்பூர், மார்ச் 29 – நெடுஞ்சாலையில் இதர மோட்டார் சைக்கிளோட்டிகளுடன் பந்தயத்தில் ஈடுபடும் நபர் ஒருவரின் பொறுப்பற்ற செயலை காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி கடும் கண்டத்தை பெற்று வருகிறது.

மின்சார ஸ்கூட்டரை விளம்பரப்படுத்தும் நோக்கில் அந்த வீடியோ பதிவுச் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்த வீடியோவில், Yamaha RXZ மோட்டார் சைக்கிள் ஒன்றை, மின்சார ஸ்கூட்டர் அபாயகரமான வேகத்தில் முந்திச் செல்கிறது.

இதர வாகனங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதால், அது பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பதிவுச் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாலை லேன்களுக்கு உள்ளேயும், வெளியிலும்நெழிந்துசெல்லும் அந்த ஸ்கூட்டர், குறைந்தது மணிக்கும் 230 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வீடியோவை இதுவரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; பலர் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை கைதுச் செய்யுங்கள்என இணையப் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வேளை ; “இளைஞர்களை தவறான பாதையில் இட்டுச் செல்லும் முயற்சி இதுஎன மற்றொருவர் சாடியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!