Latestஉலகம்

நேப்பாளத்தில் சாதுரியம்: வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையால் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பள்ளி முதல்வர்

காட்மண்டு, ஆகஸ்ட்-31,நேப்பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில், பள்ளி முதல்வர் ஒருவரின் விரைவான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் கொடூர வெள்ளப்பெருக்கிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

​திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தாவாடிக்கு காலை 9.20 மணியளவில் வெள்ளப்பெருக்கு குறித்து அவசர தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

உடனடியாகச் செயல்பட்ட அவர், பள்ளி மணியை அடித்து அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பான உயரமான பகுதிக்கு விரைவாக வெளியேற்றினார்.

​மாணவர்கள் அனைவரும் வெளியேறிய சில நிமிடங்களில், சேறும் சகதியுமாக வந்த வெள்ள நீர் 3 மாடி பள்ளி கட்டிடத்தை முற்றிலுமாக அழித்துச் சென்றது.ஆனால், 1,643 மாணவர்களும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.

அதே சமயம், மீண்டும் ஆபத்தான பகுதிக்குச் சென்ற இரண்டு பள்ளி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேப்பாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாகவே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் உயிரிழப்பையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!