Latestஉலகம்மலேசியா

நேப்பாளம்-தீபெத் பெருவெள்ளம்; சீனாவில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

பெய்ஜிங், ஆகஸ்ட்-30,​சீனாவின் Darchen பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

​தொடர்பு கோளாறுகள் காரணமாக தொடர்புகொள்ள முடியாமல் இருக்கும் மேலும் 36 மலேசியர்களைத் தொடர்புகொள்ள, சீன அதிகாரிகளுடன் இணைந்து விஸ்மா புத்ரா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

​இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாளத்தில் மேலும் 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ளும் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

​விஸ்மா புத்ராவின் 24 மணி நேர செயல்பாட்டு மையம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

எனவே, பொது மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!