Latestமலேசியா

பகடிவதை செய்தால் பெற்றோருக்கும் தண்டனை – அசாலினா

கோலாலம்பூர், ஜூன் 16 – பகடிவதை குற்றத்தில் ஒருவர் குற்றவாளி என பகடிவதை எதிர்ப்பு தீர்ப்பு மன்றம் தீர்ப்பளித்தால், அவரது பெற்றோரும் அபராதம் உள்ளிட்ட சட்டப் பொறுப்புகளை பகிர்ந்து ஏற்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் அசாலினா ஒத்மான் சாயிட் (Azalina Othman Said) தெரிவித்துள்ளார்.

2026 எதிர்-பகடிவதைச் சட்டத்தின் கீழ், பகடிவதை செய்தவரின் குடும்பத்தினருக்கும் இணைப் பொறுப்பு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பகடிவதை தொடர்பான புகார்களை நேரடியாக தீர்ப்பு வழங்கும் மன்றத்தின் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் காவல்துறையில் முன்கூட்டியே புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த தீர்ப்பு வழங்கும் மன்றம், பகடிவதை சம்பவங்களை விரைவாகவும் முழுமையாகவும் விசாரித்து தீர்ப்பு வழங்கும் சிறப்பு அமைப்பாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 250,000 ரிங்கிட் வரை இழப்பீடு வழங்கப்படலாம். அதே நேரத்தில் குற்றவாளிகள் மன்னிப்பு கோருதல், இழப்பீடு செலுத்துதல் மற்றும் ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்பது போன்ற உத்தரவுகளுக்கும் உட்படுத்தப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!