Latestமலேசியா

பத்துமலை முருகன் சிலைக்கு முன் குர்ஆன் ஓதிய வேளிநாட்டு சுற்றுப் பயணி மன்னிப்புக் கோரினார்

பத்துமலை, மே-26 – சிலாங்கூர், பத்துமலையில் முருகன் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு குர்ஆன் ஓதி, அக்காணொலி வைரலாகி சர்ச்சை ஏற்படுவதற்குக் காரணமான வெளிநாட்டு சுற்றுப்பயணி, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Abdeen என்ற பெயருடன் வலம் வரும் அந்த Influencer, தனது டிக் டோக் பக்கத்தில் அந்த மன்னிப்பு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.

எந்தவொரு மதத்தினரையும் சிறுமைப் படுத்தும் நோக்கம் தமக்கில்லை என அதில் கூறிக் கொண்ட Abdeen, பத்துமலை இந்துக்களின் வழிபாட்டு இடம் என்பது தமக்குத் தெரியாமல் போய் விட்டதாகக் கூறினார்.

அது ஏதோ வரலாற்றுப் பூர்வ இடம் தான் என்றும், அங்கு யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் வீடியோக்களை எடுத்துக் கொள்ளலாம் என்றெண்ணியே தாம் அவ்வீடியோவை பதிவுச் செய்ததாக அவர் சொன்னார்.

தான் செல்லும் பல இடங்களிலும் அப்படி குர்ஆன் ஓதுவது தமது பழக்கம் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

ஆனால் அச்செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என தாம் எதிர்ப்பார்க்கவில்லை; எனவே அவர்களிடம் மன்னிப்புப் கேட்கிறேன் என்றார் அவர்.

முன்னதாக @abdeentube என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அவ்வீடியோவுக்கு, இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Mohd Na’im Mokhtar, பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் Syahredzan Johan உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக அமைச்சர் Mohd Na’im, அச்சுற்றுப் பயணியின் பொறுப்பற்ற அச்செயல், பல்லின மற்றும் மதங்களை மதிக்காத செயல் என சாடியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!