Latestமலேசியா

பந்தாய் டாலாமில் போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற இருவரில் ஒருவர் பலி

கோலாலம்பூர், ஜூன்-25- போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக (IPD) அதிகாரிகள், மூவர் பயணித்த காரை துரத்திச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் வாகனம் பந்தாய் டாலாம் (Pantai Dalam) பகுதிவரை துரத்தப்பட்ட நிலையில், அங்கு காரிலிருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, மற்ற இருவர் தப்பிக்க முயன்று மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

சம்பவத்தை பிரிக்ஃபீல்ட்ஸ் (Brickfields) மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஹூ சாங் ஹூக் (Asisten Komisioner Hoo Chang Hook) உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!