Latestஉலகம்

பறவை காய்ச்சலால் மெக்சிகோவை சேர்ந்த முதல் ‘நபர்’ மரணம் ; உறுதிப்படுத்தியுள்ளது WHO

ஜெனிவா, ஜூன் 6 – உலகம் முழுவதும் பதிவாகியுள்ள A(H5N2) பறவைக் காய்ச்சல் தொற்றால், முதல் முறையாக மனிதர் ஒருவர் உயிரிழந்ததை, WHO – உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் அம்மரணம் பதிவாகியுள்ளது.

மெக்சிகோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது நபர் ஒருவர், காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் உடல் அசெளகரியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.

அவருக்கு எவ்வாறு பறவை காய்ச்சல் வைரஸ் பீடித்தது என்பது தெரியவில்லை என்ற போதிலும், மெக்சிகோவில் கோழி மற்றும் வாத்துகளில் அந்த வைரஸ் காணப்படுவதாக, WHO ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அதனால், உயிரிழந்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை ; அதனால் தற்போதைக்கு விபரீதமான விளைவு எதுவும் இல்லை என WHO கூறியுள்ளது.

பறவை காய்ச்சல் வைரஸ், பறவைகளுடன் தொடர்பில் இருல்கும் நீர் நாய், கரடி, மாடு உள்பட கால்நடைகளில் காணப்படுகின்றன.

எனினும், அது மனிதர்களிடையே எளிதாக பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய, ஆய்வாளர்கள் அணுக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!