Latestமலேசியா

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் நாடு முழுவதிலும் 44 புகார்கள் – ஐ.ஜி.பி தகவல்

கோலாலம்பூர், நவ 24 – நாடு தழுவிய நிலையில் அரசாங்கம், தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தொடர்பில் 44 புகார்களை போலீசார் பெற்றுள்ளதாக தேசிய போலீஸ்படைத் தலைவரான IGP டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

சைப்ரஸ் (Cyprus)சில் ‘Taktstorer’ என்பவர் பெயரிலிந்து இந்த மின்னஞ்சல் பின்லாந்து முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த முகவரி அடிக்கடி மாற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலில் காணப்பட்ட கூகுள் (Google) மின்னஞ்சலில் உள்ள மிட்டல்களை அடையாளம் காண்பதற்காக அனைத்து மாநில கல்வி இயக்குனர்களையும் போலீஸ் சந்தித்திருப்பதாக ரஸாருதீன் கூறினார். மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் முன்னுரிமை வழங்கும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இத்தகை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜமைக்காவில் மட்டும் 70க்கும் மேற்பட்ட வெடிகுண்டு புரளிகள் விடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நாடுகளின் உதவியோடும் மற்றும் FBI எனப்டும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை நடத்தப்படும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!