Latestமலேசியா

அரசியல் நிலைத்தன்மை வெளிநாடு முதலீடுகளை ஊக்குவித்துள்ளது – பிரதமர் அன்வார் தகவல்

ஷா அலாம், நவ 24 – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டு காலமாக இருந்துவரும் அரசியல் நிலைத்தன்மை உலகளாவிய தொழில் அதிபர்களின் மலேசிய முதலீடுகளை ஊக்குவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கூகுள், டிக் டோக், ‘Infineon Technologies AG’, சீனாவின் வாகன நிறுவனமான Geely மற்றும் Tesla ஆகியவவை நமது கொள்கைகள் குறித்து மலேசியா மீதான ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மலேசியாவின் சிறப்பு என்னவென்று அவர்களிடம் தாம் வினவியதாகவும் அவர்கள் அனைவருமே அரசியல் நிலைத்தன்மை தங்களிடையே நம்பிகையை ஏற்படுத்துவதில் உதவியிருக்கிறது என்று மறுமொழியை தெரிவித்திருப்பதாக அன்வார் கூறினார். கொள்கைகளும் தெளிவாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறியிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்மய கொள்கையுடன் மடானி கொள்கையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டிப்பதாக அவர் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!