Latestமலேசியா

பழைய, கைவிடப்பட்ட வாகனங்களை ‘இ-டெரெக்’ முறை வாயிலாக அகற்றலாம் – கூறுகிறார் போக்குவரத்து அமைச்சர்

செமெஞ்ஞே, மார்ச் 21 – குடியிருப்புப் பகுதிகளில் , கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சனைக்கு தீர்வுக் காண, e-Dereg எனும் ஆன்லைன் மோட்டார் வாகனங்கள் பதிவு நீக்க முறையை, JPJ – சாலை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் வாகனங்களை “ஸ்கிராப்” செய்ய விரும்பும் வாகன உரிமையாளர்கள், அதற்காக இனி சாலை போக்குவரத்து துறை முகப்புகளுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் இந்த ‘இ-டெரெக்’ முறை வாயிலாக, ஒரு மணி நேரத்தில், தங்கள் விவரங்களை எளிதாக பதிந்து கொள்ளலாம்.

நிரந்திரமாக பயன்படுத்த இயலாத அல்லது பயன்பாட்டுக்கு பாதுகாப்பற்ற அல்லது பழுதடைந்த வாகனங்களை அந்த முறையின் கீழ் எளிதாக அழிக்க பதிந்து கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும், சுற்றுசூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத வகையில், முறையாக அவை அழிக்கப்படுவதை உறுதிச் செய்ய, DOE – உரிமம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட வாகன சிகிச்சை மையங்களுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

தொடக்க கட்டமாக, E-Auto நிறுவனத்தின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ள அந்த ‘இ-டெரெக்’ முன்னோடி திட்டத்தை, சிலாங்கூர், காஜாங்கிலுள்ள, Car Medic நிறுவனம் செயல்படுத்தும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!