
மூவார், அக்டோபர்-25,ஜோகூர், பாகோ அருகே PLUS நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில், 9 மாதக் குழந்தை மற்றும் 5 வயதுச் சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
நேற்று மாலை, அந்நெடுஞ்சாலையின் தெற்கே 107-ஆவது கிலோ மீட்டரில் இவ்விபத்து நிகழ்ந்தது.
Ford Ranger வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரியின் பின்புறத்தில் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த Toyota Vios காரும் அந்த வாகனத்தின் மீது மோதியது.
இதில் Ford Ranger-ரில் பயணித்த 2 மூதாட்டிகள், 5 வயதுச் சிறுமி மற்றும் 9 மாதக் குழந்தை ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Toyota Vios காரிலிருந்த இருவர் உட்பட மேலும் நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
டிரேய்லர் லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
விபத்துக் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



