Latestமலேசியா

பாச்சோக்கில் தென்னை மரம் சாய்ந்து பள்ளி மாணவர் மரணம், நண்பர் படுகாயம்

பாச்சோக், ஜூலை-03-கிளந்தான், Bachokக்கில் தென்னை மரம் சாய்ந்ததில் 17 வயது ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரது நபர் படுகாயமடைந்தார். சம்பவத்தின் போது புயல் காற்று வீசிக் கொண்டிருந்த நிலையில் வானிலை மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நீர் பாசனக் கால்வாய் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​10 மீட்டர் உயரமுள்ள தென்னை மரம் முறிந்து அவர்கள் மீது விழுந்ததாக Bachok மாவட்ட காவல் துறை தலைவர் Suprintendan Mohamad Ismail Jamaluddin தெரிவித்தார்.

சம்பவத்தில் பலியான மாணவரும் காயமுற்ற அவரது நண்பரும் Bachok மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வேளையில் அவர்கள் பயணித்த பாதை கிராம மக்கள், குறிப்பாக மாணவர்கள், தினமும் பயன்படுத்தி வருவது எனவும் சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்த பலத்த புயல் தாக்கிய போது அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார். மரம் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!