Latestமலேசியா

பினாங்கு இரவு விடுதியில் கைகலப்பு; இருவர் மீது வழக்கு

பினாங்கு, ஆகஸ்ட் 19 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள புலாவ் திக்குஸ் இரவு விடுதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இருவரைத் தாக்கிய 2 ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவ்விருவரும் பாதிக்கப்பட்டவர்களை காயம் ஏற்படுமளவிற்கு தாக்கியதால் அவர்கள் மீது தனித்தனி குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர்கள் அக்குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நீதிமன்றம் சந்தேகநபர்களுக்கு 5,000 மற்றும் 3,000 ரிங்கிட் பிணை வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கின் சாட்சிகளுடன் தலையிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!