Latestமலேசியா

பினாங்கு போலீசின் அதிரடி நடவடிக்கையில் 400,000 ரிங்கிட் மேலான போதைப் பொருள் பறிமுதல்

ஜார்ஜ் டவுன் ஜூன் 10 – பினாங்கு Ayer Hitamமில் போதைப் பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 400,000 ரிங்கிட்டிற்கும் மேலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு , சந்தேகத்திற்குரிய 24 வயது வர்த்தகர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்ஜ் டவுன் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையினர் இரவு ஏழு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சந்தேக நபரிடம் 1.22 கிரேம் Ketamine போதைப் பொருளை பறிமுதல் செய்ததாக ஜோர்ஜ் டவுன் OCPD துணை ஆணையர் ரஸ்லாம் அப்துல் ஹமிட் ( Razlam Abdul Hamid ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து Paya Terubongகில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 397,960 ரிங்கிட் மதிப்புள்ள 2,383 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 2188 ரிங்கிட் மதிப்புள்ள 10.94 கிராம் எடையுள்ள Ketamine பொட்டலமும் கண்டுப்பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 400,428 ரிங்கிட் என ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார். இந்த போதைப் பொருள் உள்ளூர் சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு இருந்ததாக கூறப்பட்டது. மேலும் 75,000 ரிங்கிட் மத்திப்புள்ள கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!