Latestமலேசியா

பினாங்கு போலீஸ் தலைவராக ஹம்சா அகமட் நியமிக்கப்படுவார்

கோலாலம்பூர், ஏப் 12 – பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக ஹம்சா அகமட் நியமிக்கப்படுவார். Khaw Kok Chin னுக்கு பதிலாக பினாங்கின் புதிய போலீஸ் தலைவர் பதவியை மே 13 ஆம்தேதி முதல் ஹம்சா அகமட் பதவியேற்பார். போலீஸ் கமிஷனரான ஹம்சா தற்போது புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் துணை இயக்குநராக இருந்து வருகிறார். இதற்கு முன் முன் அவர் கூட்டரசு போதைப் பொருள் குற்றவியல்துறையின் துணை இயக்குநராகவும் இருந்துள்ளார்.

Khaw Kok chin கடந்த மாதம் போதைப் பொருள் குற்றவியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். கூட்டரசு பண பரிமாற்ற பிரிவின் தலைவராக இருந்த Hasbullah Ali இடைக்கால போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனிடையே புக்கிட் அமான சிறப்பு பிரிவின் துணை இயக்குநராக இருந்த Lim Joo Soon கூட்டரசு குற்றவியல் துறையில் கணினி குற்றப்பிரிவின் துணை இயக்கநராக பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!