Latestமலேசியா

பிரதமர் அன்வாரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

கோலாலம்பூர், மார்ச் 28 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் S. Jaishankar மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்திய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் கிளை வளாகத்தை மலேசியாவில் அமைப்பதற்கான வசதி குறித்த தமது கடப்பாட்டையும் அன்வார் தெரிவித்தார். இரண்டு நாள் வருகை மேற்கொண்டு மலேசியா வந்துள்ள Jaishankar புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் மணி 2.30 அளவில் அன்வாரை சந்தித்தார் . பிரதமருடனான அவரது சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. வர்த்தகம் , அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி, விவசாயம் சுற்றுலா , தற்காப்பு ,இலக்கவியல் மற்றும் மியன்மார் மீதான வட்டார விவகாரங்கள் குறித்தும் அன்வாரும் Jaishankar ரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டது.

அரிசி பற்றாக்குறையை மலேசியா எதிர்நோக்கிய வேளையில் நாட்டிற்கு உதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்காக அன்வார் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு, இந்தியாவிலிருந்து விவசாய பொருட்கள் இறக்குமதிக்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தருவார் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே அடுத்த ஆண்டு மலேசியா தலைமையேற்கவிருக்கும் ஆசியானுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளதோடு இந்தியாவுக்கு வருகை புரியும்படி அன்வாருக்கான மோடியின் அழைப்பையும் Jaishankar மறுஉறுதிப்படுத்தினார். இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு பின் விரைவில் அந்நாட்டிற்கு வருகை புரிவதற்கும் அன்வார் முன்வந்துள்ளார் என பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் விவசாய உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ Mohamad Sabu, வாணிக, முதலீடு, மற்றும் தொழில்துறை துணையமைச்சர் Liew chin Tong ஆகியோரும் கலந்துகொண்டனர். உலகளாவிய நிலையில் மலேசியாவின் 12 ஆவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக கடந்த ஆண்டு இந்தியா விளங்கியதோடு மலேசியாவுடன் மொத்தம் 77.76 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தையும் பதிவு செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!