Latestஇந்தியாமலேசியா

பிரதமர் அன்வார் சென்னைப் பயணம்: லண்டன் பயணத்தை ஒத்திவைக்க முதல்வர் விஜய் முடிவு

சென்னை, செப்டம்பர்-9,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது லண்டன் பயணத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​புது டெல்லியில் சனிக்கிழமை நடைபெறும் ‘BRICS’ உச்ச நிலை மாநாட்டைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 13 அன்வார் சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

அச்சமயத்தில் தமிழக ஆளுனரையும் முதல்வர் விஜய்-யை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அச்சமயம் விஜய் லண்டன் செல்லவிருப்பதாகவும் அதனால் பிரதமர் அன்வாரை சந்திக்க இயலாது என்றும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து, முதலமைச்சரின் லண்டன் பயணத்தை ஒத்தி வைக்குமாறு தமிழக ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டுப் பிரதமரை, நேரில் வரவேற்று பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் முக்கியமானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், மலேசியப் பிரதமரின் வருகையைத் தொடர்ந்து அவரது பயணத் திட்டம் செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!