Latestஅமெரிக்காஇந்தியாஉலகம்

“பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான்; இந்தியா எங்களை 100% நம்பலாம்” — டெல்லி நிகழ்வில் ட்ரம்ப் அதிரடி பேச்சு

வாஷிங்டன், மே-25-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், இந்தியா தங்களை “100 விழுக்காடு” நம்பலாம் என உறுதியளித்துள்ளார்.

புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நேரடி தொலைபேசி அழைப்பு மூலம் ஆச்சரியமளித்த அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கான தனது முழு ஆதரவை வெளிப்படுத்தினார்.

​மேலும் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு நெருங்கிய நண்பர் எனக் குறிப்பிட்டதோடு, தான் பிரதமர் மோடியின் மிகப் பெரிய இரசிகன் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பந்தம் முன்பை விட இப்போது மிகவும் வலுவாக உள்ளது என்றும், இந்தியாவின் எந்தவொரு தேவைக்கும் வாஷிங்டன் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்தார்.

​இந்த உயர்மட்ட நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், இந்திய-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!