Latestஉலகம்

பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம் – 2,400 பேர் கைது; அதிபர் மக்ரோன் கண்டனம்

பாரீஸ், அக்டோபர்-19,பிரான்ஸில் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைந்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள் பெரும் வன்முறையாக மாறியுள்ளன.

நாடு முழுவதும் 500,000-க்கும் அதிகமானோர் போராட்டங்களில் பங்கேற்ற நிலையில், தலைநகர் பாரீஸ், மார்சேய் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், அரசாங்கக் கட்டடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சுமார் 2,400 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஆயிரம் போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

பாரீஸில் போராட்டத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வன்முறைச் சம்பவங்கள் தமக்குக் கோபத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் இத்தகைய வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைதியான போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை ஏற்றுக்கொண்ட மக்ரோன், நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தவில்லை.

என்றாலும், பொதுச் சொத்துகளையும் வர்த்தக நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவைப்பட்டால் போராட்டங்களுக்குத் தடை விதிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என அவர் நினைவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!