Latestமலேசியா

பிறை தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி; ‘வாடகைக்கு வாங்கிச் சொந்தமாக்கும்’ திட்டத்தை அறிவித்த பினாங்கு அரசு

பிறை, அக்டோபர்-11 – பினாங்கு, பிறை, கம்போங் மெயின் ரோட்டில் அக்டோபர் 7 அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 4 வீடுகள் பலத்த சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக, வீடுகளில் இருந்த 10 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

​சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது சேவை மையம் மூலம் முதற்கட்ட அவசர நிதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் வாயிலாக குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் வரையிலான பேரிடர் நிதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

​பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலத் தீர்வாக, மாக் மண்டினில் பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தின் கீழ் செயல்படும் ‘வாடகைக்கு வாங்கிச் சொந்தமாக்கும்’ (Rent-to-Own) திட்டத்தை சுந்தராஜூ பரிந்துரைத்துள்ளார்.

இதன் மூலம், சம்பந்தப்பட்டவர்கள் மாதம் 250 ரிங்கிட் செலுத்தி 15 ஆண்டுகளில் வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

அதே சமயம், இப்பகுதியை முழுமையாக மறுசீரமைக்கவும் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!