Latestஉலகம்

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 12 பேர் பலி; 309 பேர் காயம்

ரியாத், அக்டோபர்-11- சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், 12 பேர் – உயிரிழந்தனர்; மேலும் 309 பேர் காயமடைந்தனர்.

நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில், விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஒன்று தாக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் நால்வர் சவூதி அரேபியர்கள்; இருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகச் சவூதி அரேபியாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட நிலையில், ஏராளமான விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

ஏமனில் சவூதி அரேபிய கூட்டுப் படைகளுக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபியாவின் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இணையக்கூடும் என அதிபர் டோனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!