பத்து பஹாட், ஜூன் 12 – ஜோகூர், பாகோவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், BMW ஆடம்பர காரையும், லோரியையும் உட்படுத்திய கோர விபத்தில், நால்வர் உயிரிழந்தனர்.
அந்நால்வரும் BMW காரில் பயணித்தவர்கள் ஆவர். நேற்றிரவு மணி 8.15 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான BWM காரில் சிக்கிக் கொண்டிருந்த நால்வர், தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர்.
அக்காரை செலுத்திய உள்நாட்டு ஆடவர் ஒருவரும், இரு வியட்நாமிய பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை ; மற்றொரு வியட்நாமிய பெண் சிகிச்சை பலனின்றி சுல்தானா நோரா இஸ்மாயில் (Sultanah Nora Ismail) மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எனினும், அவர்கள் யார் என்ற விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை.
அவ்விபத்து குறித்து, போலீஸ் விரைவில் அறிக்கை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.