Latestமலேசியா

புதிய மை கார்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள்

புத்ரா ஜெயா, மே-8-அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய MyKad-இல், தற்போதைய பதிப்பில் உள்ள 23 பாதுகாப்பு அம்சங்களுடன் ஒப்பிடுகையில், இதில் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் லேசர் பொறிப்பு, புற ஊதா என்கிற Ultraviolet (UV) கூறுகள், hologramகள், guilloche வடிவங்கள், microtext, அமலாக்க நோக்கங்களுக்கான QR குறியீடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குறியாக்கத் தொழில்நுட்பத்துடன் கூடிய chip ஆகியவை அடங்கும் என்று தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் ( Badrul Hisham Alias ) தெரிவித்தார்.

தற்போதுள்ளதை விட இது நிச்சயமாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

சரியான நேரம் வரும்போது புதிய MyKad வெளியீட்டை உள்துறை அமைச்சு அறிவிக்கும், மேலும் தேசியப் பதிவுத் துறை மட்டத்தில், இதைச் செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று இன்று ஊடகங்களுடனான தேசிய பதிவுத்துறையின் நிர்வாகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மாறிவரும் பாதுகாப்பு சவால்களுக்கு ஏற்ப அடையாளப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் கடப்பாட்டை இந்தப் புதிய MyKad-இன் அறிமுகம் பிரதிபலிக்கிறது என்று அவர் விவரித்தார்.

MyPoCA மற்றும் MyTentera-வின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!