Latestமலேசியா

புத்தக வவுச்சருக்கு கல்வி அமைச்சின் Delima இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்

கோலாலம்பூர், மே 31 – 4. 5 ,6 ஆம் வகுப்பு மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள், கல்வி அமைச்சின் கீழ் உள்ள   கல்வி நிலைய மாணவர்கள்  மலேசிய இலக்கவியல் கல்வி   பயிலும் செயலியான  Delima  மூலம் இன்று   நண்பகல்  2 மணியிலிருந்து  புத்தகம் வாங்குவதற்கான வவுச்சரை பெறமுடியும் .   

 4ஆம் வகுப்பு முதல்   6 ஆம் வகுப்புவரையிலான மாணவர்கள்    50 ரிங்கிட்டிற்கான புத்தக வவுச்சரையும் ,  இடைநிலைப்பள்ளி மாணவர்கள்,  உயர்க்கல்வி  நிலைய மாணவர்கள்  மற்றும்   மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள்  100 ரிங்கிட்டிற்கான  புத்தக வவுச்சரை  பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். 

மாணவர்களுக்கான  வவுச்சர் வழங்கும் முறை மற்றும்  Delima  செயலியையும் அதற்கான கடவுச் சொல்லையும்   பயன்படுத்தி    kota Buku Digtal அடையாளத்தை கிளிக் செய்ய  வேண்டும்.  அதன் பிறகு தொடக்கப் பள்ளி பிள்ளைகள்,  இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலைய மாணவர்கள்  கணினி திரையில் காணப்படும் Kota  Buku Digital  மற்றும்  kredit கணக்கில்    பதிவு செய்து  JUDULCADANGAN  MADANI யில்  காணப்படும் பல்வேறு தலைப்புகளில் உள்ள  புத்தகங்களை தேர்வு செய்யலாம் என  கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்பிறகு   e-kedai  மற்றும் (E – Store Kredit )  தேர்வு செய்து  பணம்  வழங்குவதை தேர்வு செய்யலாம் .    இந்த நடைமுறை முடிந்த பின்னர்  பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு  வாங்கப்படும் புத்தகங்கள்  அனுப்பிவைக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!