Latestமலேசியா

புனித நூலை முஸ்லீம் அல்லாத நிறுவனத்திடம் கொடுத்து அச்சடிப்பதா? அச்சக நிறுவனத்தின் இயக்குநருக்கு 8K அபராதம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-23, இஸ்லாமியர்களின் முதன்மைப் புனித நூலான அல்-குர்ஆனின் 3,800 பிரதிகளை முஸ்லீம் அல்லாத நிறுவனத்திடம் கொடுத்து அச்சடித்தக் குற்றத்திற்காக, அச்சக நிறுவனமொன்றின் இயக்குனருக்கு 8,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அல்-குர்ஆன் அச்சிடுதல் உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் LPPPQ-வின் விதிமுறையை மீறியதாக, 34 வயது Muhammad Hatim Ab Wahab குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு அத்தண்டனையை விதித்தது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

எனினும் அந்நபர் நீதிமன்றத்திடம் அபராதத் தொகையைச் செலுத்தினார்.

முன்னதாக தீர்ப்பை வாசித்த போது, குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதி கடிந்துக் கொண்டார்.

அச்சகத் தொழில் செய்பவராக இருந்துக் கொண்டு, இது போன்ற மத உணர்ச்சி குறித்து அறியாதிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என Majistret Farah Azura சொன்னார்.

அதே நீதிமன்றத்தில், LPPPQ-வின் உரிமம் இல்லாமல் அந்த 3,800 பிரதிகளை அச்சடிக்க உதவியக் குற்றத்திற்காக, முஸ்லீம் அல்லாத அச்சக நிறுவனத்தின் இயக்குனரான 41 வயது Sum Yew Hom-முக்கும் அதே எட்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!