Latestஉலகம்

புறப்பட்ட பிறகு Delta Airline விமானத்தின் அவசர ஸ்லைடு விழுந்தது

வாஷிங்டன் , ஏப் 27 – நியூயார்க்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் வழியில் நேற்று புறப்பட்ட Delta Airlines ஜெட் விமானத்தில் இருந்து அவசரகாலத்தில் வெளியேறும் Slide கீழே விழுந்ததாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் 183 பேருடன் பயணம் செய்த ஊழியர்கள் அவசர நிலையை அறிவித்து விமானத்தை உடனடியாக John F. Kennedy அனைத்துலக விமான நிலையத்திற்கு திரும்பினர். விமானத்தின் அவசர நிலைக்கான Slide மீண்டும் பொருத்துவதற்கு ஆதரவான முயற்சிக்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக Delta Airline வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை என்பதால், Delta விமானக் குழுவினர் தங்கள் விரிவான நடவடிக்கையை மேற்கொண்டு Joh F . Kennedy விமான நிலையத்திற்கு திரும்புவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றினர் என அந்த விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்வரை சம்பந்தப்பட்ட போயிங் 767 விமானம் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு ஒத்துழைப்போம் என Delta Airloines கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!