
பூச்சோங், ஜூன் -1 – பூச்சோங்கில் உள்ள LDP நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக, எதிர் திசையில் வந்த Honda Sedan கார் ஒன்று, மற்றொரு கார் மீது பலமாக மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிய பரபரப்பான dash cam வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Taman Perindustrian Puchong LRT நிலையமருகே நேற்று மதியம் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாலையில் தனது பாதையில் நேராகச் சென்றுகொண்டிருந்த காரின் முன், திடீரென கருப்பு நிற ஒரு Honda Sedan மிக அதிவேகமாக எதிர் திசையில் வந்துள்ளது.
நெருங்கி வந்த அந்த Honda கார், நேராக வந்த காரின் பக்கவாட்டில் மிக வேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் நிற்காமல், அந்த Honda காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது;
எனினும் உள்ளே இருந்த 2 பெண்களும் காயமின்றி தப்பினர்.
பாதிக்கப்பட்ட காரின் dash cam கேமராவில் இந்த முழுச் சம்பவமும் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
இதுவரை போலீஸ் தரப்பு எதுவும் கருத்துரைக்கவில்லை.



