பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
ரொம்பினிலிருந்து குவாந்தான் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த Proton Wira கார், வலப்பறச் சாலையில் புகுந்து MPV வாகனத்தை மோதியதில் விபத்து நேர்ந்தது.
Proton Wira நொறுங்கியதில் அதன் ஓட்டுநரான 52 வயது Hamzah Zahari, அவரின் 38 வயது மனைவி Rahimah Awang Muda மற்றும் 4 முதல் 10 வயதிலான 3 பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக பெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இவ்வேளையில், MPV வாகனத்திலிருந்த கணவனும் மனைவியும் காயமடைந்து ரொம்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடம் வளைவானப் பகுதியென, பெக்கான் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் Mohd Zaidi Mat Zin கூறினார்.
கவனக்குறைவாக வாகனமோட்டி மரண விபத்தை ஏற்படுத்தியதாக அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.