கோலாலம்பூர், அக்டோபர்-14, பேராக் மற்றும் பஹாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை உயர்ந்துள்ள நிலையில், புதிதாக மலாக்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பேராக்கில் மொத்தமாக 625 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்றிரவு அவ்வெண்ணிக்கு 268 பேராக மட்டுமே இருந்தது.
பஹாங் தெமர்லோவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் 4 PPS மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
ஜோகூரில் வெள்ள நிலவரத்தில் பெரிதாக மாற்றமில்லை; குளுவாங், கூலாய், பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் 200 பேர் PPS மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கெடாவில் நிலைமை சற்று சீரடைந்துள்ளது; நேற்றிரவு 2,257 பேராக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை 726 பேராகக் குறைந்துள்ளது.
மலாக்கா, ஜாசினில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் சில இடங்களில் திடீர் வெள்ளமேற்பட்டது.
இதனால், Ayer Molek, Serkam, Merlimau போன்ற பகுதி வாழ் மக்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.