
கோலாலம்பூர், நவம்பர் 2 –பொருளாதார அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளராக (Makro) பணியாற்றி வந்த டத்தோ டி.எஸ். வி. வள்ளுவன் வேலூ நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் (Datuk Seri Shamsul Azri Abu Bakar) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சேவைக்கும் வளர்ச்சிக்கும் மறைந்த டத்தோ வி. வள்ளுவன் ஆற்றிய பங்களிப்புகளும் அர்ப்பணிப்பும் பெரிதும் மதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இழப்பால் துயரமடைந்துள்ள குடும்பத்தினர் மனவலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மறைந்தவரின் இறுதிச் சடங்கு இன்றுபிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை, சிலாங்கூர், சைபர்ஜெயாவில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு சிலாங்கூர், பூச்சோங், பண்டார் பூச்சோங் உத்தாமாவில் தகனச் சடங்கு நடைபெற்றது.



