Latestமலேசியா

பொழுதுபோக்கு ஏரியில் 5 வயது சிறுவன் மூழ்கி மாண்டதில் குற்ற அம்சங்கள் இல்லை போலீஸ் தகவல்

கோலாலம்பூர், பிப் 22 – பெட்டாலிங் ஜெயாவிலுள்ள   பொழுதுபோக்கு ஏரி ஒன்றில்  ஐந்து வயது சிறுவன்  மூழ்க மாண்ட சம்பவத்தில் குற்ற  அம்சங்கள் எதுவும் இல்லையென   பெட்டாலிங் ஜெயா  மாவட்ட போலீஸ் தலைவர்  CP Shahrulnizam Ja’afar தெரிவித்திருக்கிறார்.  சுங்கை பூலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில்  அந்த சிறுவனின் உடலில் எந்தவொரு காயங்கள் அல்லது துன்புறத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லையென  அவர் கூறினார்.  நீரில் மூழ்கியதே அச்சிறுவனின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதால்  அது ஒரு திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியிருப்பதாக  Shahrulnizam  தெரிவித்தார். 

Autism குறைபாடு உள்ள  அந்த சிறுவன்  பார்வை திறன் குறைபாடு இருந்த  கார்டையும்  கொண்டிருந்தான்.  நேற்று முன்தினம் மாலை மணி 6.30 அளவில்  அச்சிறுவன்  காணாமல் போனதாக  போலீசார் புகார் பெற்றிருந்தனர்.  தனது இரட்டை சகோதரருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அச்சிறுவன் காணாமல்போனதாக  கூறப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது  அச்சிறுவனை கவனித்துக்கொண்டிருந்த  அவனது தந்தை கண் அயர்ந்து  தூங்கிவிட்டதாக கூறப்பட்டது.   அச்சிறுவனின் உடல்  ஏரியில் அவன் விழுந்த இடத்திலிருந்து  நான்கு மீட்டர் தொலைவில்  மாலை மணி 6.50 அளவில் மிதந்துகொண்டிருப்பதை  பொதுமக்கள் கண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!