
பொந்தியான், ஏப்-29-மழை பெய்துகொண்டிருந்த சூழலில், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக வைரலான காணொளியில் காணப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
64 வயதான அந்த நபர் தனது வாக்குமூலத்தை அளிக்க பொந்தியான் போலீஸ் தலைமையகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக பொந்தியான் போலீஸ் நிலைய தலைவர் ஹஸ்ரத் உசேயன் மியோன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான பள்ளி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
பொந்தியான் கும்பலின் முகநூல் பக்கத்தில் நேற்று காலை மணி 7.55க்கு இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதை போலீஸ் கண்டறிந்தது.
இந்த விவகாரம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் , ஜாலான் Pontian சாலையின் 55.9-ஆவது கிலோமீட்டரில் ஜாலான் Pontian Utama சந்திப்பின் நுழைவு சாலையில் நிகழ்ந்தது.



