Latestமலேசியா

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்ஸியின் கணவர் காலமானார்

கூச்சிங், ஜூன்-18-மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும், சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரியின் கணவர் டத்தோ காமில் பின் மிசுவாரி காலமானார்.

அமைச்சரின் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறைந்த டத்தோ காமிலின் உடல் கோலாலம்பூரில் முறைப்படி நிர்வகிக்கப்பட்ட பின்னர், இன்று ஜூன் 19-ஆம் தேதி சரவாக், கூச்சிங்கிற்கு கொண்டுச் செல்லப்படும்.

பொது மக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக, கூச்சிங், பெத்ரா ஜெயாவில் உள்ள அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அன்னாரது உடல் வைக்கப்படும்.

இறுதி மரியாதை செலுத்துவதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் வேளையில், உடல் கூச்சிங்கில் உள்ள சாம்பாரியாங் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!