
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – தனது 9 வயது மகளை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூட்டரசு நீதிமன்றத்தின் 2-1 பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.
நீதிமன்றம், கொலைக் குற்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி, மரண தண்டனைக்கு பதிலாக கைது செய்யப்பட்ட நாள் முதல் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை அமலாக்கமும் 12 பிரம்படிகளும் விதித்தது.
விசாரணையில், தொழுகை செய்யாததற்காக சிறுமியை 500 முறை ‘பம்பிங்’ மற்றும் ‘சிட்-அப்’ செய்யக் கட்டாயப்படுத்தியதுடன், பின்னர் உதைத்து வயிற்றில் மிதித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. சிறுமியின் உடலில் மொத்தம் 23 வெளிப்புற காயங்கள் இருந்ததாக அரசு தரப்பு தெரிவித்தது



