Latestமலேசியா

மனித வள அமைச்சகம் இனி அதிகாரப்பூர்வமாக ‘Kesuma’ என்று அழைக்கப்படும்

புத்ராஜெயா, மார்ச் 4 – மனித வள அமைச்சகம் ‘KESUMA’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. KESUMA என்பது ‘Kementerian Sumber Manusia’-வில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் தொடக்க எழுத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.

இதனை தொடர்ந்து, இனி அனைத்து அதிகாரப்பூர்வ வணிகங்களுக்கும் ‘KESUMA’ என்ற சொல்லே இன்று முதல் பயன்படுத்தப்படும்.

இந்த இரண்டு மாதங்களில், 3K மூலோபாய பணிக்கு இணங்க, ‘KESUMA’ தொழிற்சங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.

மேலும், மலேசிய தொழில்துறை நீதிமன்ற நிறுவனத்தில் சிர்திருத்தங்களையும் தொழிலாளர்களின் ஊதிய உரிமைகளையும் உறுதியாக வலியுறுத்தி சமூக பாதுகாப்பு திட்டங்களையும் விரிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, திறன் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அமைச்சகத்தின் அனைத்து துறைகள், நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை செயல்படுத்துதலும் மனித வள அமைச்சகத்தில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!