Latestஉலகம்

மராபி எரிமலை வெடிப்பு; 11 மலை ஏறுபவர்கள் பலி; 12 பேர் காணவில்லை

ஜகார்த்தா, டிச 4 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னும் 12 பேரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது.

வெடிப்புக்குப் பிறகு குறைந்தது 49 மலையேறிகள் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேடல் மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்துள்ளது.

2,891 மீட்டர் உயரமுள்ள எரிமலை பல மாதங்கள் குமுறிய பின் நேற்று கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு வெடித்ததாக தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து எரிமலை வெடித்த முனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் வரை தடுப்பு பகுதிகளாக அதிகாரிகள் அறிவுத்துள்ளனர்.
மராபி, சுமத்ராவில் உள்ள மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகும். இது கடைசியாக 2018 இல் குமுறியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!