Latestமலேசியா

மருத்துவமனையில் மலாய்க்கார இளைஞருக்கு இந்திய பெண் உணவூட்டும் காணொளி வைரல்

கோலாலம்பூர், ஜூன் 8- நோயினால் அவதிப்படும் நோயாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் சக மலேசியர்களின் அன்பும் ஆதரவும் இன, சமய வேறுபாடுகளை கடந்து மேலோங்கியுள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அண்மையில் ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலாய்க்கார இளைஞருக்கு 63 வயதுடைய அஞ்சலா தேவி ( Anjala Devi) தாய் அன்போடு உணவு ஊட்டும் காணொளி வைராலானதைச் தொடர்ந்து அவரது மனிதாபிமானதை நெட்டிசன்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

தனது உறவினர் ஜெய்சங்கர் (Jaya Shankar) மாரடைப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்ப்பதற்காக லார்க்கினைச் சேர்ந்த அஞ்சலா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வார்டிலுள்ள மலாய்க்கார இளைஞரை பார்ப்பதற்கு அந்த நேரத்தில் எவரும் வரவில்லை. உணவு அருந்தாமல் படுக்கையிலே இருந்ததால் அவருக்கு உதவும் மனப்பான்மையில் உணவு ஊட்டிவிட்டதாக அஞ்சலா தேவி தெரிவித்தார். அந்த இளைஞனும் மாரடைப்புக்கு உள்ளானதால் சொந்தமாக உணவருந்த முடியாமல் இருந்ததால் தாம் உதவியதாகவும் அப்போது அவர் கண்ணீர்விட்டது தமக்கு நெகிழ்சியை ஏற்படுத்தியதாக அஞ்சலா தேவி கூறினார். இதனிடையே தமது அத்தையின் மனிதாபிமானத்தால் கவரப்பட்டதால் சக மலேசியருக்கு உணவு ஊட்டும் அந்த காட்சியை காணொளியாக பதிவுசெய்ததாகவும் அந்த காணொளிக்கு அதிகமானோர் பாரட்டு தெரிவித்திருப்பதால் தாம் மகிழ்ச்சி அடைந்ததாக அவரது உறவினரான ஜமுனாவதி (Jamunahwathy) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!