Latestஉலகம்

மலாவியின் துணையதிபர், இதர 9 பேர் பயணம் செய்த விமானம் காணாமல்போனது

பிலான்டயர், ஜூன் 11 – Malawi துணை அதிபர் Saulos Klaus Chilima மற்றும் இதர ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. 51 வயதுடைய Chilima ராணுவ விமானத்தின் மூலம் தலைநகர் Lilongwe-யிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை மணி 9.17 அளவில் புறப்பட்டதாக மலாவி அதிபர் மற்றும் அமைச்சரவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. காணாமல்போன விமானத்தை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ராடாரிலிருந்து அந்த விமானம் மறைந்ததை தொடர்ந்து அந்த விமானத்துடன் தொடர்புகொள்வதற்கான முயற்சியில் விமான தொழில்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி எதுவும் வெற்றி பெறவில்லை.

அந்த விமானம் காலை மணி 10.02 அளவில் Mzuzu விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் சாத்தியமான வேட்பாளராக கருதப்படும் Chilima 2022 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்ட போதிலும் அவர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு அலுவலகம் மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!